உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 May 2026

உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 


உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களிடையே உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்லை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, ஸ்கார்லட் பவுண்டேஷன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை ஆகியவை இணைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியை நடத்தின.


இந்த பேரணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பேரணியின் போது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் காரணங்கள், அதனால் உருவாகும் பாதிப்புகள், தடுப்பு முறைகள், சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்த கட்டுப்பாடு போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், “உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவோம் ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தற்போதைய வாழ்க்கை முறையில் அதிகரித்து வரும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மக்கள் தங்களது உடல்நலனை தொடர்ந்து பரிசோதித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சி, பொதுமக்களிடையே உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad